2 குழந்தைகளுடன் தாய் மாயம்


2 குழந்தைகளுடன் தாய் மாயம்
x

2 குழந்தைகளுடன் தாய் மாயம் ஆனார்

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

லாலாபேட்டை அருகே உள்ள மத்திபட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி நந்தினி (வயது 28). இந்த தம்பதிக்கு சஞ்சனா என்ற மகளும், அன்புச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நந்தினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நந்தினி தனது மகன், மகளுடன் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் தங்களது மகள் மற்றும் பேரன், பேத்தியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நத்தினியின் தந்தை நடேசன் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 குழந்தைகளுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.


Next Story