2 குழந்தைகளுடன் தாய் மாயம்
2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
அரியலூர்
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேலின் மனைவி சண்முகப்பிரியா (வயது 23). இவர்களுக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சண்முகபிரியா, தனது தந்தை செந்தில் வீடுள்ள கீழவிளாங்குடியில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகப்பிரியா மற்றும் அவரது குழந்தைகளை காணவில்லை. இதனால் செந்தில், தனது உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிந்து குழந்தைகளுடன் மாயமான சண்முகப்பிரியாவை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story