3 வயது குழந்தையுடன் தாய் மாயம்
3 வயது குழந்தையுடன் தாய் மாயம் ஆனார்.
சிவகாசி,
சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 28). இவருக்கும் எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவபாலன் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருப்பூருக்கு வேலைக்கு சென்ற கருப்பசாமி தனது மனைவி மகாலட்சுமி, மகன் சிவபாலன் ஆகியோரை சிவகாசி ரிசர்வ்லைனில் உள்ள மாமியார் பஞ்சவர்ணம் வீட்டில் விட்டு, விட்டு சென்றார். இ்ந்தநிலையில் மகாலட்சுமி, தனது மகன் சிவபாலனுடன் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தாய், மகனை பல இடங்களில் தேடினர். அவர்களை பற்றிய தகவல் கிடைக்காததால் சிவகாசி டவுன் போலீசில் பஞ்சவர்ணம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.