கலெக்டர் அலுவலகத்தில் தாய்- மகன் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் தாய்- மகன் தர்ணா
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாய்- மகன் தர்ணாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

திண்டிவனம் தாலுகா கொரளூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மனைவி சரோஜா (வயது 65). இவர் தனது இளைய மகன் மாற்றுத்திறனாளியான தாமோதரன் (30) என்பவருடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சரோஜா கூறுகையில், எனது கணவர் சின்னையன் ஏற்கனவே இறந்துவிட்டார். அவரது பெயரில் இருந்த 3.47 செண்ட் நிலத்தை என்னுடைய மூத்த மகன் முருகன், அபகரித்துக்கொண்டதோடு எங்கள் இருவரையும் கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். நாங்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே எங்கள் இருவரையும் பராமரிக்காத காரணத்தினால் அந்த தானசெட்டில்மெண்ட் மற்றும் கிரைய ஆவண பதிவுகளை ரத்து செய்து என்னுடைய நிலத்தை மீட்டுத்தருமாறு முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தியதன்பேரில் சரோஜா, மாவட்ட கலெக்டரிடம் சென்று இதுபற்றி மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story