தாய்-மகன் கடத்தலா? போலீசார் விசாரணை
தாய்-மகன் கடத்தலா? போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே பரம்பூர் போலம்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரேவதி (வயது 22). இவர்களுக்கு உபநிசோதன் என்ற 2½ வயது மகன் உள்ளான். கடந்த 2 வருடத்திற்கு முன்பு சரவணன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரேவதியும், அவரது மகன் உபநிசோதனும் போலம்பட்டியில் உள்ள தாத்தா சுப்பையா வீட்டில் இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டில் இருந்த இருவரும் திடீரென காணவில்லை. பின்னர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்பையா அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story