தாய்-தொழிலாளி தற்கொலை


தாய்-தொழிலாளி தற்கொலை
x

விருதுநகர் அருகே தொழிலாளியும், அவருடைய தாயாரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்

விருதுநகர் அருகே தொழிலாளியும், அவருடைய தாயாரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தச்சு தொழிலாளி

விருதுநகர் அருகே உள்ள பாலவன நத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தச்சுத்தொழிலாளி. இவருடைய தாயார் சுப்புலட்சுமி (72).

கணேசன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில், சுப்புலட்சுமி கடம்பன்குளம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். கணேசன் அடிக்கடி வந்து தாயாரை பார்த்துச் சென்றார். ஒரு வருடத்திற்கு முன்பு கணேசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால், தன் தாயார் சுப்புலட்சுமியை சரியாக கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

தாயுடன் தற்கொலை

இந்த நிலையில், கணேசன் தனது தாயாரை பார்க்க சென்றிருந்தார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. சுப்புலட்சுமியின் வீட்டின் அருகில் இருப்பவர்கள் சுப்புலட்சுமியும், கணேசனும் வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் கூறியதையடுத்து கணேசனின் மகன் அசோக்குமார் (23) மற்றும் குடும்பத்தினர் கடம்பங்குளம் வந்து பார்த்தனர். அப்போது கணேசன், தாயார் சுப்புலட்சுமியுடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story