முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்க பயிற்சி


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்க பயிற்சி
x

பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்க பயிற்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கே.எம். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஏலகிரி வி.செல்வம், பொருளாளர் கே.டி.சீனிவாசன், துணை சேர்மன் ஆர்.கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.பாஸ்கர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் கே.பார்த்திபராஜா கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் என்ஜினீயர் பி.கனகராஜ், பி.ஜெய்சங்கர், அறங்காவலர்கள் சி.சண்முகம், கேத்தரின் ஜார்ஜினா லியோ, பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story