மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி  தொழிலாளி பலி
x

கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டை சோ்ந்தவர் மாரியப்பன்( வயது65). இவர் அங்குள்ள கொள்ளு பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாரியப்பன் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் திரும்பி வீட்டை நோக்கி வந்தார். அப்போது அந்த வழியாக கணபதி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (20) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தமாரியப்பன் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விக்னேஷ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மாரியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story