மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

சேதுபாவாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைபட்டினத்தை சேர்ந்தவர் ஷேக்தாவுது(வயது43). இவர் நேற்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சேதுபாவாசத்திரம் நோக்கி சென்றாா். .கழுமம்குடா அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் இருந்த பாலத்தின் மீது மோதியது. இதில் ஷேக்தாவுது தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story