மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு

தஞ்சாவூர்

திருவையாறு;

தஞ்சை அருகே உள்ள வடகால் கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது65). இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் மீன் வாங்குவதற்காக வடகாலிலிருந்து மணக்கரம்பை பைபாஸ் வழியாக பள்ளியக்ரஹாரத்துக்கு சென்றார். அப்போது திருவையாறு அகிலாண்டபுரத்தை சேர்ந்த துரைராஜ் மகன் சரண் (21) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் சைக்கிளில் சென்ற கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் கோவிந்தராஜ் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்தார்.இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story