மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

திருக்காட்டுப்பள்ளியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப் பள்ளியில் சமீபத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு் போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் திருச்சி மாவட்டம் வழுதியூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் மாரியப்பன்(வயது31), வீரபாண்டி (27) ஆகிய இருவரும் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமானேரி கிராமத்தில் தங்கி இருந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களை திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில் போலீசார் அண்ணன்- தம்பி இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்‌


Next Story