மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமணப்பிரியன் (வயது30). இவரும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள உறந்தைராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சத்தியபிரியன் என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில் ரமணப்பிரியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை உறந்தைராயன்குடி காட்டில் உள்ள தனது நண்பர் சத்தியபிரியன் வீட்டின் முகப்பில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியூருக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ரமணப்பிரியன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story