குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார் பறிமுதல்


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2023 7:15 PM GMT (Updated: 17 Jun 2023 7:15 PM GMT)

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், அனுமதியின்றி மோட்டார் வைத்து குடிநீர் பைப்புகளில் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று தலைஞாயிறு 12-வது வார்டு கீழத்தெரு பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 7 பேரின் வீட்டில் உள்ள மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதேபோல தலைஞாயிறு முழுவதும் அனுமதியின்றி மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என்றும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.


Next Story