இறைச்சிக்கடைக்காரர் பலி


இறைச்சிக்கடைக்காரர் பலி
x

தஞ்சை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் இறைச்சிக்கடைக்காரர் பலியானார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் இறைச்சிக்கடைக்காரர் பலியானார்.

இறைச்சிக்கடைக்காரர்

தஞ்சையை அடுத்த காசவளநாடுதெக்கூரை சேர்ந்தவர் ஆசிப்அலி. இவருடைய மகன் சபில் (வயது 33). இவர் ஆட்டு இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். சம்பத்தன்று ஒரு திருமண வீட்டிற்காக ஆடு வெட்டுவதற்காக சென்றார். அங்கு ஆடு வெட்டி சமைப்பதற்காக கொடுத்து விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.விளார்- கொல்லாங்கரை சாலையில் வந்த போது அந்த வழியாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக சபில் வந்த மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்ததில் சபிலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story