மோட்டார் சைக்கிள் விபத்து:தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்து:தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.

தனியார் நிறுவன உரிமையாளர்

தூத்துக்குடி, மில்லர்புரம் மேற்கு ஹவுசிங் போர்டு ஹரிராம் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 39). இவர் தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான சொக்கலிங்கபுரத்துக்கு குடும்பத்துடன் சென்று உள்ளார். நேற்று முன்தினம் செக்காரக்குடியில் உள்ள தனது அக்காள் முனியம்மாளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றாராம்.

விபத்தில் சாவு

அவர் சொக்கலிங்கபுரத்தில் இருந்து செக்காரக்குடி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து செக்காரக்குடிக்கு செல்லும் குறுக்குபாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சண்முகவேலை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story