மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
ஆரணியில் தீத்தொண்டு வார நிறைவு விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஆரணி
தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தீத்தொண்டு வார விழா நடத்தப்படுகிறது.
அப்போது பொதுமக்களிடையே தீ விபத்து மற்றும் இடர்பாடு சமயங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.
அதன்படி தீத்தொண்டு வார நிறைவு விழா இன்று நடந்தது. ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிளில் கலந்து கொண்டு கோட்டை தெரு, பள்ளிக்கூடத் தெரு, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, கார்த்திகேயன் ரோடு, நகராட்சி சாலை வழியாக தீயணைப்பு நிலையம் வந்து நிறைவு செய்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றபோது தீயணைப்பு வாகனமும் உடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.