2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்-பணம் திருட்டு

2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்-பணம் திருட்டு
x

கீழ்வேளூர் அருகே 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள்-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேளாங்கண்ணிக்கு சென்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவருடைய மகன் பிரவீன் (வயது 23). கோழிஇறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள்-பணம் திருட்டு

கீழ்வேளூர் அருகே வந்த போது மதுகுடிக்க கீழ்வேளூர்-ஓர்குடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ.10 ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர். பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story