ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்

வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ டிரைவர் பலி

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மகன் சாம்சன் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவருக்கு சுவேதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சுவேதாவுக்கு 15-ந் தேதி பிறந்தநாளாகும். இதையொட்டி சாம்சன் மாலையில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் சாம்சன் வீட்டில் இருந்து திடீரென மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சிறிதுதூரம் சென்ற நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சாம்சன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி பிறந்த நாளில்

இதனை அறிந்த சாம்சன் மனைவி சுவேதா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியின் பிறந்தநாளில் சாம்சன் பலியான சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story