லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஆசிரியர் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆசிரியர் பலியானார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன்(வயது 52). இவர் வீடூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரும், இவரது மகன் சஞ்சய்யும்(18) நேற்று முன்தினம் கூட்டேரிப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சஞ்சய் ஓட்டினார்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சஞ்சய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது பின்னால் வந்த லாரி, சகாதேவன் மீது மோதியது. இதில் சகாதேவன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சஞ்சய் படுகாயமடைந்தார்.

மகனுக்கு சிகிச்சை

இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சய்யை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story