மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
கல்லக்குடி, ஜூன்.14-
புள்ளம்பாடி ஒன்றியம் திண்ணகுளம் சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் எழிலரசன் (வயது 27). இவர் தனது உறவினர் அண்ணாதுரை மகன் ராஜா ராபர்ட் (35) என்பவருடன் லால்குடியில் உள்ள உறவினரின்காதணி விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். புள்ளம்பாடியை அடுத்த கோவாண்டகுறிச்சி அருகே வந்தபோது, எதிரே ஆலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சரத்குமார் (29) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த எழிலரசன், ராஜாராபர்ட் ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு எழிலரசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். .ராஜா ராபர்ட் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.