கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கேர்பெட்டா கே.கே.நகரை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் நதீஷ் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். கோத்தகிரி-குன்னூர் சாலையில் கிருஷ்ணா புதூர் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நதீஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.