மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; டாஸ்மாக் மேற்பார்வையாளர்  பலி
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் மணலூர்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பாட்டுக்காக தனது மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். விளந்தை கிராமம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story