தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சின்னசேலம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை அடுத்த ராஜபாளையம் அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தனேந்திரன் மகன் நித்திஷ்(வயது19). டிப்ளமோ பட்டதாரியான இவர் சம்பவத்தன்று திருச்செங்கோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெய்வேலி நோக்கி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். சின்னசேலத்தை அடுத்த அம்மையகரம் சமத்துவபுரம் பிரிவு சாலை அருகே வந்தபோது முன்னால் சென்ற காரின் டிரைவர் எந்த வித சிக்னல் மற்றும் சைகை காட்டாமல் திடீரென காரை வலது புறமாக திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி நித்திஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த ஆட்டுப்பண்ணையை சேர்ந்த அழகப்பன்(65) என்பவர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.