பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு


பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
x

அம்மாப்பேட்டை அருகே ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை அருகே ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தடுப்பு சுவரில் மோதியது

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சூழியக்கோட்டை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாண்டியன் (வயது22). விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பனையக்கோட்டை சென்று விட்டு மீண்டும் சூழிக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

கம்பர்நத்தம் அருகே வடக்கு நத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்தப் பகுதியில் உள்ள வடவாற்று பாலத்தின் மேற்கு பகுதி தடுப்பு சுவரில் பாண்டியன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் ேமாதியது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார் சோழன் உள்ளிட்ட போலீசார் பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாண்டியனின் தம்பி செல்வா (18) கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story