மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
2 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்குமார் (வயது 24). இவர் தனது நண்பர் காளிதாசுடன் மோட்டார் சைக்கிளில் உறவினரின் விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்ப வந்து கொண்டிருந்தாா்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
வாலிபர் பலி
பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அருண் குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் சிகிச்சைபலனின்றி அருண்குமார் உயிரிழந்தார். காளிதாஸ் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அருண்குமாரின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.