மோட்டார் சைக்கிள் மோதிமுதியவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதிமுதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:18+05:30)

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தோப்பூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பூலோகபாண்டி (வயது 74). ஒய்வு பெற்ற கிராம வருவாய் உதவியாளர். இவர் கடந்த 31-ஆம்தேதி சாத்தான்குளத்தில் இருந்து இட்டமொழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பூலோகபாண்டி படுகாயம் அடைந்தார். அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவரை தேடிவருகின்றனர்.


Next Story