மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; பெண் படுகாயம்


மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; பெண் படுகாயம்
x
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி நளினி (வயது 30). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் மகன் ராகேஷ் (வயது 10) அழைத்துக்கொண்டு என்.என்.கண்டிகை பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

என்.என்.கண்டிகை பஜார் வீதி அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் நளினியின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நளினி படுகாயம் அடைந்தார். குழந்தை ராகேஷ் காயங்கள் இன்றி உயிர்த்தப்பினார். படுகாயம் அடைந்த நளினியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story