தந்தை-மகன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்


தந்தை-மகன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்
x

தந்தை-மகன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்

திருப்பூர்

காங்கயம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நரேசன் (35). அவரது மகன் மார்வீர் (7). இவர்படியூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு படியூரில் உள்ள ஓட்டலில் தந்தையும், மகனும் உணவு வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்துள்ளனர்.

அப்போது காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற திருமூர்த்தி என்பவரது இருசக்கர வாகனம் 2 பேர் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் நரேசன், மார்வீர் மற்றும் திருமூர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களைஅக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

--------------


Next Story