மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Aug 2023 1:00 AM IST (Updated: 2 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா பிங்கார் அருகே சுல்தான்பேட்டையை சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் பாசில் உசேன் (வயது 19). கிருஷ்ணகிரி பகுதிக்கு வந்திருந்த இவர், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பாசில் உசேன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story