மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
x

குடியாத்தம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் குணாளன். இவரது மகன் சூர்யா (வயது 23), டிராக்டர் டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குன்றம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெல்லூர்பேட்டை ஏரிக்கரை சோலை நகர் அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பயணிகள் நிழற் கூடத்தின் சுவற்றில் மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சூர்யா சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story