குற்ற சம்பவங்களை தடுக்க மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனம்


குற்ற சம்பவங்களை தடுக்க மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனம்
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குற்ற சம்பவங்களை தடுக்க மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஊராட்சி பகுதியை சார்ந்த அரசு கலைக்கல்லூரி முதல் அண்ணா நுழைவு வாயில் வரை என 10 கிலோ மீட்டர் தொலைவை தொடர்ந்து கண்காணிக்க 5 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை இன்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் 24 மணி நேரமும் கண்காணிக்க 5 ரோந்து வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவை 2 கிலோ மீட்டருக்கு ஒரு வாகனம் என 10 கிலோ மீட்டருக்கு 5 ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

மேலும் ஒவ்வொரு ரோந்து வாகனத்திற்கும் ஒரு வாக்கி டாக்கி மற்றும் முகத்தின் புகைப்படம் வைத்து அவர் மீது குற்ற பதிவுகள் ஏதேனும் உள்ளதா என்று கண்டறியும் செயலி கொண்ட செல்போன் ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story