விவசாயிகள் நலவுரிமை சங்கத்தினர் மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
விவசாயிகள் நலவுரிமை சங்கத்தினர் மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
மன்னார்குடி:
தமிழ்நாடு விவசாயிகள் நலவுரிமை சங்கம் சார்பில் மது ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மீட்பு, இலவசங்கள் புறக்கணிப்பு, அரசு பள்ளிகளில் படிப்பு ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. மன்னார்குடியில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு மாநில தலைவர் ராசபாலன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் இளஞ்சேரன், மாநில துணை செயலாளர் பெரியசாமி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் முத்து விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி தேரடியில் தொடங்கிய ஊர்வலம் கோட்டூர், திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தது. அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவி சலீமா நாச்சியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.