பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x

திருவண்ணாமலையில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சர்வதேச பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான மற்றும் சர்வதேச மனித உரிமை தின விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் இன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள் ஊர்வலம் அண்ணா நுழைவு வாயில் அருகில் தொடங்கி கிரிவலப்பாதையை சுற்றி வந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட ரெட்கிராஸ் சங்கத் தலைவர் இந்திரராஜன், ஒன் ஸ்டாப் சென்டர் அலுவலர் எலிசபத்ராணி, சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் கோமதி, தொட்டில் குழந்தை திட்ட அலுவலர் ராஜசேகர், விஷன் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் ஜெயராஜ் உள்பட சமூக நலத்துறை அலுவலர்கள், அரிமா சங்க நிர்வாகிகள், தனியார் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story