மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதல்; கூலித்தொழிலாளி பலி
ஓசூர்:-
பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிக்கொண்டதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
கூலி தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் பாகலூர் அருகே ஈச்சங்கூரை சேர்ந்தவர் ஆனந்தப்பா (வயது 55), கூலித்தொழிலாளி.
இவரும், அவருடைய மனைவி ரத்தினம்மா (53) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பாகலூர் - மாலூர் சாலையில் பாகலூர் தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தனர்.
பலி
அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்- மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஆனந்தப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ரத்தினம்மா படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஸ்கூட்டரில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உடனே அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிகிறது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.