மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் திவாகர். நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து திவாகர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வாணியம்பாடியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கண்காணிப்பு காட்சிகள் இருந்தும் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


Next Story