மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

அருப்புக்கோட்டை அருகே ேமாட்டார்சைக்கிள் திருட்டு போனது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது48). இவர் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனது வாடிக்கையாளரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை காந்தி நகரில் நிறுத்திவிட்டு வாடிக்கையாளரை பார்த்து விட்டு திரும்பி வருவதற்குள் வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story