மோட்டாா் சைக்கிள் திருட்டு
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தெற்குதெரு கிதிர் காலனியை சேர்ந்தவர் லியாக்கத் அலி. இவருடைய மகன் முகமதுபகத் (வயது34). இவர் தனது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனா். இது குறித்து முகமதுபகத் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது முத்துப்பேட்டை திமிலத்தெருவை சேர்ந்த காதர் உசேன் மகன் தர்வீஸ்அகமது (21), அதே பகுதியை சேர்ந்த சாகுல் அமீது மகன் சபீக்அகமது (23) என தெரியவந்தது. இவா்களை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
Related Tags :
Next Story