மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

உடன்குடியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

கன்னியாகுமரி மாவடடம் குலசேகரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் உடன்குடி சுப்பிரமணியபுரத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story