மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 46). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு கோவிலில் பசுக்களுக்கு காய்கறிகள் வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு காய்கறிகளை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளுக்கு போட்டார். பின்னர் திரும்ப வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story