காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு


காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
x

காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கே.டி. எம் தெருவை சேர்ந்த காஜா முகைதீன் மகன் சாதிக் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். தனது நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி உபயோகித்துள்ளார். சம்பவத்தன்று இரவு முன்பு நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்று விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story