மோட்டார் சைக்கிள் திருட்டு; போலீசார் விசாரணை


மோட்டார் சைக்கிள் திருட்டு; போலீசார் விசாரணை
x

மோட்டார் சைக்கிள் திருட்டு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை தாலுகா தேன்கனியூர் கரயான்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் பிரபாகரன் (வயது 36). கொத்தனார். நேற்று முன்தினம் பிரபாகரன் விராலிமலை சந்தைக்கு காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் நிறுத்திவிட்டு காய்கறி வாங்க சென்றுள்ளார். பின்னர் காய்கறி வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரபாகரன் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story