மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
மோட்டார் சைக்கிள் திருடியவர் போலீசில் சிக்கினார்.
சிவகாசி,
சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அவர் ராஜபாளையம் சுரைக்காய்பட்டி பகுதியை சேர்ந்த ஜோதிமுத்து (வயது48) என்பது தெரிய வந்தது. அவரிடம் மோட்டார் சைக்கிள் குறித்த ஆவணங்களை கேட்ட போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் சாத்தூர், ராஜபாளையம், அருப்புக் கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து 9 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.