மோட்டார் சைக்கிள் திருடர்கள் சிக்கினர் -14 வாகனங்கள் பறிமுதல்
மோட்டார் சைக்கிள் திருடர்கள் சிக்கினர் -14 வாகனங்கள் பறிமுதல்
மதுரை
திருமங்கலம்,
திருமங்கலம் முகமதுஷாபுரம் மற்றும் சந்தைப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரவு நேரங்களில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு ஒரு கும்பல் திருடி வந்தது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருமங்கலம் முகமதுஷாபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் முகமதுஷாபுரம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி(30), விஜய்(23) என்பதும், மோட்டார் சைக்கிள்களை அவர்கள் திருடியதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 14 வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story