மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்


மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்
x

தெள்ளாரில் மோட்டார் சைக்கிள் - சரக்கு வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கூடலூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. அவரது மகன் ஆனந்த் (வயது 27), தண்ணீர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தும், அவரது நண்பர் மதனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தெள்ளார்-நெற்குணம் செல்லும் வழியில் சேனல் ஏரிக்கரை அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த சரக்கு வேனும் மோதிக்கொண்டன.

இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆனந்த் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story