நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்கள்


நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்கள்
x
தினத்தந்தி 25 Aug 2023 1:00 AM IST (Updated: 25 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில்நிலைய குட்ஷெட் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் இருக்கின்றன. இந்த 6 நடைமேடைகளையும் இணைத்து நடைபாலம் உள்ளது. மேலும் 6-வது நடைமேடையை அடுத்து குட்ஷெட்பகுதி அமைந்து இருக்கிறது. 6-வது நடைமேடையில் பயணிகள் ரெயில்கள் நிறுத்தப்படுவது இல்லை. என்ஜின்கள், ரெயில் பெட்டிகள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. இந்த நிலையில் 6-வது நடைமேடையில் நடைபாலத்தின் படிக்கட்டு அருகே நேற்று முன்தினம் இரவு 3 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த 3 மோட்டார் சைக்கிள்களும் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் மற்ற நடைமேடைகளில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் 3 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. நல்லவேளையாக மோட்டார் சைக்கிள்களில் பற்றிய தீ, பிற இடங்களுக்கு பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல்லில் குட்ஷெட் அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு யாராவது தீ வைத்தார்களா? அல்லது நெருப்பை அணைக்காமல் வீசி எறிந்த சிகரெட்டால் தீப்பிடித்து எரிந்ததா? என்று ரெயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story