கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்


கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்;  2 வாலிபர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:09+05:30)

கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிள்கள் மோதியவிபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

பசுவந்தனை:

கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்ல சிவம் மகன் நிஷாந்த் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பசுந்தனை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல் ( 29)

மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story