மோட்டார்சைக்கிள்கள் மோதல்; கபடி வீரர் பலி
குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் கபடி வீரர் பலியானார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி பூங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவரது மகன் தேவராஜ் (வயது 30). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் பிரபல கபடி வீரர் ஆவார். அக்ராவரம் ஏரிப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35).
நேற்று முன்தினம் பூங்குளம் கிராமம் அருகே மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த மூர்த்தி மற்றும் தேவராஜின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் கிராம மக்கள் உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக தேவராஜ் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் தேவராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.