மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்
வாணியம்பாடி அருகே மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்கள் மோதி 4 பேர் காயமடைந்தனர்.
வாணியம்பாடி அருகே மாதகடப்பா மலைப்பகுதியைச் சேர்ந்த சக்தி (வயது 23) என்பவர் நேற்று மாலை வாணியம்பாடி பஜாருக்கு வந்து காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு மலை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மலைப்பகுதியில் இருந்து எதிரே மோட்டார் சைக்கிளில் தும்பேரி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (22), சீனிவாசன் (18), சக்திவேல் (19) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.