வாகன ஓட்டுனர்கள்-உரிமையாளர்கள் சங்க குடிசை எரிந்து நாசம்


வாகன ஓட்டுனர்கள்-உரிமையாளர்கள் சங்க குடிசை எரிந்து நாசம்
x

வாகன ஓட்டுனர்கள்-உரிமையாளர்கள் சங்க குடிசை எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே உள்ள வாடகை கார் மற்றும் டாட்டா சுமோ வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தின் குடிசை உள்ளது. இந்த குடிசையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை எரிந்து நாசமானது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story