மேம்பாலத்தில் கொட்டிய ஆயிலில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
நெல்லை சந்திப்பு மேம்பாலத்தில் கொட்டிய ஆயிலில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை டவுன் பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக நெல்லை சந்திப்புக்கு வந்த ஒரு வாகனத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக ஆயில் கொட்டியது. பாலத்தின் நடுவில் சுமார் 15 மீட்டர் தூரத்துக்கு ஆயில் கொட்டி இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உள்ளிட்ட சிலர் அந்த ஆயிலில் வழுக்கி விழுந்து லேசான காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி மற்றும் போலீசார் ஆயில் கொட்டிய இடத்தில் மண்ணை போட்டு சரிசெய்தனர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story